பாதுகாப்பு உடன்படிக்கைகளுக்கும் எம்.சி.சிக்கும் தொடர்பு இல்லை – அமெரிக்கா!

Saturday, September 21st, 2019

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 480 மில்லியன் டொலர்களுக்கான மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையை ஏனைய பாதுகாப்பு உடன்படிக்கைகளுக்கு முன்னதாகவே செய்திருக்க முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எம்சிசி உடன்படிக்கை 2018 டிசம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட்டிருக்கவேண்டும். எனினும் பாதுகாப்பு உடன்படிக்கைளுக்காக இந்த உடன்படிக்கை திகதி இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டதாக எம்சிசியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜென்னர் எடெல்மென் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் இரண்டு பாதுகாப்பு உடன்படிக்கைகளை செய்துக்கொண்டால் அதற்கு பதிலாக எம்சிசியின் ஊடாக அமெரிக்கா இலங்கைக்கு அன்பளிப்பை வழங்கவுள்ளதாக கருத்து ஒன்று இருப்பதாகவும் எடெல்மென் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த டிசம்பரில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படாமைக்கு நாட்டில் இடம்பெற்ற அரசியல் ஸ்திரதன்மையே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: