வடகொரியாவில் கடும் வறட்சி – மக்கள் பெரிதும் பாதிப்பு!

வரலாற்றில் மிகக் கொடூரமான வறட்சியினால் வட கொரியா பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 37 வருடங்களில் இந்த வருடத்திலேயே அதிக வறட்சி ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றன.
வட கொரியாவைச் சேர்ந்த 10 மில்லியனுக்கும் அதிகமானோர் அவசர உணவுத் தேவையை எதிர்நோக்கியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு ஒருவர் சுமார் 300 கிராம் உணவை மாத்திரமே உட்கொண்டு உயிர்வாழ்வதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், வட கொரியா முழுவதும் கடந்த 5 மாத காலத்தில் 54.4 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் 1982 ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகிய குறைந்தளவு மழைவீழ்ச்சி எனவும் அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related posts:
5 ஆண்டுகளுக்குப் பின்னர் கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட 26 மாலுமிகள்!
ரஷ்யா ,சீனா மீது அணு குண்டு வீச அமெரிக்கா திட்டம்?
மூன்றாம் உலகப்போர் தொடர்பில் ரஷ்யா எச்சரிக்கை - ஐக்கிய நாடுகளின் செயலாளர் ரஷ்ய ஜனாதிபதியை சந்திப்பு!
|
|