ரஷ்யா ,சீனா மீது அணு குண்டு வீச அமெரிக்கா திட்டம்?

Monday, May 1st, 2017

ரஷ்யா மற்றும் சீனா மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்கல் நடத்த போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. இரு தினங்களுக்கு முன்னர் அந்நாடு நடத்திய சோதனை தோல்வியில் முடிந்தது.

அமெரிக்கா, சீனா போன்ற உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி வட கொரியா தொடர்ந்து இதை செய்து வருகிறது.இதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்கா அதிகளவிலான போர் கப்பல்களை வட கொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அங்கு தென் கொரியாவுடன் சேர்ந்து வட கொரியாவை தாக்குவதற்கான பயிற்சியில் அமெரிக்கா ராணுவத்தினர் ஈடுபடவுள்ளனர்.சீனா, வட கொரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையில், திடீர் திருப்பமாக ரஷ்யா மற்றும் சீனா மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீச போவதாக அமெரிக்க அரசு அதிகாரி Paul Craig Roberts தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஆச்சரியபடும் வகையிலான தாக்குதலை ரஷ்யா மற்றும் சீனா மீது அமெரிக்க நடத்த போவதாக நான் நம்புகிறேன்.

சில வருடங்களாகவே அமெரிக்காவின் போர் கோட்பாடுகள் ஆவணங்களில் மாறுதல்கள் தெரிகின்றன.

இதை வைத்து பார்க்கும் போது அணு ஆயுத தாக்குதலை அமெரிக்க நடத்த போவது உறுதி எனவும், இது நடந்தால் இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு அமெரிக்காவுக்கு பதிலடி தரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சீனா மற்றும் ரஷ்யாவிடம் மிக சிறந்த ஆயுதங்கள் உள்ளதால் அவர்களிடம் நாங்கள் மோதினால் தோற்க நேரிடலாம் என அமெரிக்கா ராணுவம் முன்னர் சொன்னது குறிப்பிடத்தக்கது.

Related posts: