தடையை மீறி வடகொரியா ஏற்றுமதி!

Monday, August 6th, 2018

இலங்கை உட்பட பல நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் வடகொரியா, ஆடைத்துறை தடையை மீறியுள்ளதாக ஐ.நா சபை குற்றம் சுமத்தியுள்ளது.
அணுவாயுத உற்பத்தி மற்றும் பயன்பாடு காரணமாக வடகொரியாவின் உற்பத்திப் பொருட்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளது. எனினும் அந்த தடையையும் மீறி 2017-2018ஆம் ஆண்டுகளில் இலங்கை, இந்தியா, உட்பட்ட பல நாடுகளுக்கு 100 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆடைகளை வடகொரியா ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா சபை குற்றம் சுமத்தியுள்ளது
அத்துடன் தொடர்ந்து அணுவாயு உற்பத்தி மற்றும் பயன்பாடு என்பவற்றிலும் சட்டவிரோதமாக பெற்றோலிய உற்பத்திகளை கப்பல்களில் இருந்து கப்பல்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளிலும் வடகொரியா ஈடுபட்டு வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது
கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் சீனாவும், ரஷ்யாவும், வடகொரியா மீதான பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்று கோரி முன்வைத்த யோசனையின் போதே ஐக்கிய நாடுகள் சபையால் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.
இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை வடகொரியா பதில் வழங்கவில்லை.

Related posts: