வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு :சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!

Sunday, September 11th, 2016

சென்னையில் கடந்த சில நாட்களாக இரவில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மேடவாக்கம், பெரும்பாக்கம், தாம்பரம், போரூர் உள்பட பல இடங்களில் 1 மணி நேரம் கனமழை பெய்தது. மழையின் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

இந்த மழை இன்று இரவும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேற்கு மத்திய வங்க கடல் மற்றும் வடமேற்கு வங்க கடல் அதையட்டிய கடலோர பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி கீழே இறங்கி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறஉள்ளது. இதன் காரணமாக தமிழகம் – புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். 2 நாட்கள் இரவு நேரங்களில் மழை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Evening-Tamil-News-Paper_75592768193

Related posts: