கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பு – திணறும் பிரேசில் மருத்துவமனைகள்!

Tuesday, May 19th, 2020

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பிரேசிலின் தலைநகரில் உள்ள மருத்துவமனைகள் செயல் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தலைநகர் ஸாபாலோவில் வைரசினால் பாதிக்கப்பட்ட நோயாயளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாததன் காரணமாக மருத்துவமனைகள் செயல் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என நகர மேயர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள் 90 வீதம் நிரம்பிவிட்டன என தெரிவித்துள்ள அவர் அடுத்த சில வாரங்களில் மருத்துவமனைகள் செயல் இழக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். பிரேசிலின் தலைநகரில் இதுவரை 3000ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச அளவில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்ட நான்காவது நாடாக பிரேசில் மாறியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 7000ற்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனபிரேசிலின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241,00 ஆக அதிகரித்துள்ளது

Related posts: