தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் காயம்!

Sunday, March 31st, 2024

தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று மேற்பார்வையாளர்களும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை இதனைத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக லெபனானின் அரச ஊடகம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டை இஸ்ரேலிய இராணுவம் மறுத்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

முன்பதாக கடந்த வருடம் ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையிலான போர் ஆரம்பமானது.

இதனை தொடர்ந்தும் இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கு ஆதரவான லெபனானின் ஹெஸ்பொல்லா குழுவுக்கும் இடையிலான மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: