ஜேர்மனியில் இஸ்லாமிய ஆடையான ஃபர்தாவிற்கு தடை விதிப்பது சாத்தியமே: ஏங்கலோ மேர்கல்!

Thursday, December 8th, 2016

ஜேர்மனியில் இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையான ஃபர்தாவிற்கு தடைவிதிப்பது சட்டத்தின்படி சாத்தியமானது என அந்த நாட்டின் ஜனாதிபதி ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொதுக்குழு மாநாட்டின் போதே குறித்த இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் இஸ்லாமிய பெண்களின் கலாச்சாரப்படி முகம் முழுவதையும் மூடி மறைப்பது, ஜேர்மனிய கலாசாரத்திற்கு பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற பொது இடங்களில் மாத்திரம் ஃபர்தாவிற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அகதிகள் தொடர்பான கொள்கைகளில், மக்களிடமுள்ள தெளிவின்மையை பயன்படுத்தி, ஜேர்மனியின் எதிர்க்கட்சியான வலதுசாரி ஜனரஞ்சக கட்சி பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில் வலதுசாரி ஜனரஞ்சக கட்சியிடம் இருந்து வரும் சவால்களை சமாளிக்கும் வகையில் ஏங்கலோ மேர்கல் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

download

Related posts: