5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரஷ்யா சென்றடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கர் !

Wednesday, December 27th, 2023

ரஷ்யாவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இன்று மொஸ்கோவை சென்றடைந்தார்.

இந்தப் பயணத்தின்போது ரஷ்ய துணைப் பிரதமரும் தொழில் மற்றும் வா்த்தகத்துறை அமைச்சருமான டெனிஸ் மாண்டுரோவைச் சந்தித்து மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சுக்களை நடத்துகின்றார்..

ரஷ்ய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவைச் சந்தித்து இருதரப்பு மற்றும் சா்வதேச பிரசிச்னைகள் குறித்து அவா் ஆலோசிக்க உள்ளார்

இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது வா்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, போக்குவரத்து தொடா்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

‘இரு நாட்டு மக்களுக்கு இடையேயான தொடா்பு, கலாசார உறவை மையப்படுத்தி, மஸ்கோ, செயின்ட் பீட்டா்ஸ்பொ்க் ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் வெளியுறவு அமைச்சா் கலந்துகொள்வாா்’ என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. எனினும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரசிச்னைக்குத் தீா்வு காணவேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

உக்ரைன் மீதான போருக்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ரத்து செய்தன. இந்தச் சூழலில் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தற்போது இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ரஷ்யாவுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தை அமெரிக்கா உட்பட பல சர்வதேச நாடுகள் உற்று நோக்கியுள்ளன.

இதேவேளை, ஜெய்சங்கரின் ரஷ்ய ஜனாதிபதி உடனான சந்திப்புகளை இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட வில்லை. என்றாலும் இந்த விஜயத்தில் ரஷ்ய ஜனாதிபதியை ஜெய்சங்கர் நிச்சயம் சந்திப்பார் என பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: