துருக்கியில் 125 பொலிஸாருக்கு நேர்ந்த அவலம்!

Wednesday, October 12th, 2016

கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி துருக்கி இராணுவத்தின் ஒரு பிரிவினர் இராணுவ புரட்சிக்கு முயற்சித்தனர். எனினும் பொது மக்களின் ஆதரவுடன் அது முறியடிக்கப்பட்து. குறித்த  புரட்சிக்கு முயற்சித்த 125 பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இந்த இராணுவ புரட்சிக்கு பின்னால் அமெரிக்க வாழ் துருக்கி மத தலைவர் பெதுல்லா குலன் இருந்திருக்கலாம் என துருக்கி அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.இந்நிலையில், இராணுவ புரட்சி மேற்கொண்ட விடயத்தில் மத தலைவர் பெதுல்லா குலனின் ஆதரவாளர்கள் மீது துருக்கி அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதனடிப்படையில், தற்போது 125 பொலிஸ் அதிகாரிகளை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த துருக்கி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே 32 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு, அரசு துறைகளை சேர்ந்த ஒரு இலட்சம் பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Examination Department copy

Related posts: