பிரித்தானியா விலகினால் ஐரோப்பிய ஒன்றியம் உடைந்துவிடும் – சுவீடன் வெளியுறவு அமைச்சர்

Sunday, June 12th, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரித்தானியா வாக்களித்தால், ஐரோப்பா ஒன்றியம் உடைய வாய்ப்பாக அமைந்துவிடும் என சுவீடனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையராக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மார்கட் வால்ஸ்ட்ராம், பிரித்தானியா வெளியேறினால் இது மற்ற நாடுகளிலும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த தூண்டுதலாக அமையும் என கூறியுள்ளார். மேலும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் எப்படி வந்தாலும் அதன் விளைவுகள் மோசமானதாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருப்பதற்கு ஆதரவாக வாக்களித்தால், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற நாடுகள் தங்கள் உறுப்பினர் விதிகளில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்தும், அதன் நிறுவனங்கள் குறித்தும் அவர் தெரிவித்த கவலைகள் ஐரோப்பாவின் பல தலைநகரங்களில் ஏற்கனவே வெளிவந்த கருத்துக்களை எதிரொலிக்கின்றன.

பிரித்தானியாவில் இந்த வாக்கெடுப்பு நடக்க இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், இந்த வாக்கெடுப்பு குறித்த கருத்துக் கணிப்புகள் போட்டி முடிவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கும் என்று கோடிகாட்டுகின்றன.

160611132826_margot_wallstrom_eu_640x360_getty_nocredit

160308114613_european_union_uk_640x360_bbc

Related posts: