மிரட்டலுக்கு பணியாத வடகொரியா!

Tuesday, September 5th, 2017

அமெரிக்காவின் மிரட்டலையும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

உலக நாடுகள் எதிர்ப்பையும், பொருளாதார தடைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.

கடந்த ஜூலையில் அமெரிக்க நகரங்களை தாக்கும் திறன் கொண்ட 2 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்நாடு அடுத்தடுத்து சோதனை செய்தது.இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

இது சற்றே தணிந்திருந்த நிலையில் வடகொரியா நேற்று அதிரடியாக ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.ஏற்கனவே ஐந்து முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி முடித்துள்ள வடகொரியா, மிகவும் அபாயகரமானதாக கருதப்படும் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை நடத்தி இருப்பது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை மிரள வைத்துள்ளது.

இது கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பரில் நடத்திய 5வது அணுகுண்டு சோதனையை விட இது 5 முதல் 6 மடங்கு வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.வடகொரியாவில் வடக்கு ஹாம்ங்யாங் மாகாணத்தில் உள்ள கில்ஜூ பகுதியில் நடத்தப்பட்ட ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையால் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தென்கொரிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், முதலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், சிறிது நேரத்தில் 2வது முறையாக 4.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், 2வது முறை நிலஅதிர்வு ஏற்படவில்லை என தென்கொரியா மறுத்துள்ளது.வடகொரியா அணுகுண்டு சோதனை செய்ததை ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ கானோ உறுதி செய்துள்ளளார். இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் ஷினோ அபே கூறுகையில், வடகொரியாவின் இந்த சோதனை ஏற்றுக் கொள்ள முடியாதது. இதை கடுமையாக எதிர்க்கிறோம் என்றார்.

Related posts: