அமெரிக்காவில் எச்-4 விசாவுக்கு முற்றுப்புள்ளி: டிரம்ப் அரசு முடிவு!

Wednesday, April 25th, 2018

அமெரிக்காவில் எச்1-பி வைத்திருப்போரின் கணவன் அல்லது மனைவி அங்கு பணியாற்ற வழங்கப்படும் எச்-4 விசாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முடிவுசெய்துள்ளது.

டிரம்ப் அரசின் இந்த முடிவால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

ஒபாமா ஆட்சியின் போது, அமெரிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசா வைத்திருப்போரின் கணவன் அல்லது மனைவியும் அமெரிக்காவில் பணியாற்றும் வகையில் எச்-4 விசாவழங்கப்பட்டது. ஒபாமாவின் இந்த விசா சலுகையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம், தற்போது எச்-4 விசாவின் கீழ் பணியாற்றி வரும் சுமார் 70 ஆயிரம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும்என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து அதிகத் திறன் வாய்ந்த ஊழியர்கள் அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வகையில் எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இவர்களது கணவன் அல்லது மனைவியும்அமெரிக்காவில் பணி வாய்ப்பு பெறும் வகையில் ஒபாமா அரசு சிறப்பு சலுகையை வழங்கியிருந்தது. இந்த சலுகையின் கீழ் இந்தியர்களே அதிகம் பயன்பெற்றனர்.

இந்த சலுகையை நிறுத்த டிரம்ப் தலைமையிலான அரசு முடிவு செய்து விரைவில் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: