காஷ்மீர் எல்லையில் தொடரும் மோதல்!

Monday, July 24th, 2017

பகுதியிலுள்ள பாடசாலைகள் காலவரையறையற்று மூடப்பட்டுள்ளன. மோதல்களில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பாடசாலைகள் முழுமையாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை கட்டடத்தின் சுவர்களில் குண்டுகளால் துளைக்கப்பட்டுள்ளதையும், கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.இந்நிலையில், மாணவர்களை பாதுகாப்பான பாடசாலைகளுக்கு இடமாற்றுவது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இது தொடர்பில் உரிய தீர்மானம் எட்டப்படாவிடின் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் வீடுகளில் தங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவர்.எல்லைக் கட்டுப்பாடு தொடர்பில் கடந்த 2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்திய- பாகிஸ்தான் துருப்புகளிடையே மோதல் நீடித்து வருகிறது.இவ்வாறாக தொடர்ந்துவரும் மோதல் தொடர்பில் டெல்லியும், இஸ்லாமாபாத்தும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: