பாரிய சூறாவளியினுள் சிக்கவுள்ளது ஹவாய் தீவுகள்!

Thursday, August 23rd, 2018

பசுபிக் சமுத்திரத்தின் ஹவாய் தீவுகளை பாரிய சூறாவளி தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது சூறாவளி வகைகளில் நான்காவது மண்டலத்தை சேர்ந்தது என சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹவாய் – ஹொனலுலு, ஓவாலு, மாவுய், லஹாய், மொலகாய் போன்ற தீவுகள் இந்த சூறாவளியால் பாதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி மணிக்கு 155 கிலோமீற்றர் வேகத்தில் ஹவாய் தீவுகளை நோக்கி நகர்ந்தவண்ணம் உள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது, குறித்த சூறாவளி ஹவாய் தீவுகளில் இருந்து சுமார் 315 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஹவாய் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு ஹவாய் ஆளுநர் டேவிட் ஈஜ் தெரிவித்துள்ளார்

Related posts: