வடகொரியா புதிய ஏவுகணை பரிசோதனை!

Friday, July 26th, 2019

வடகொரியாவின் புதிய ஏவுகணை பரிசோதனையானது தென்கொரிய படைவீரர்களுக்கான எச்சரிக்கையாகும் என வடகொரியா தெரிவித்துள்ளது.

தமக்கு எதிரான நேரடி அச்சுறுத்தலை நீக்குவதற்காகவே குறித்த ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜொங் அன் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் வடகொரியா இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை வடகொரியாவின் தென் கிழக்கு பிராந்திய வொன்சானில் இருந்து ஜப்பன் கடல் பகுதி நோக்கி செலுத்தியிருந்தது.

அணுவாயுத விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்புக்கும் வடகொரிய தலைவர் கிம் ஜொங் அன்னுக்கும் இடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன.

எனினும் குறித்த திட்டத்தை முழுமையாக கைவிடுவது குறித்தும் அமெரிக்க வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடையை நீக்குவது தொடர்பிலும் இரு நாடுகளுக்கிடையில் தொடர்ந்தும் முரண்பாடுகள் நீடிக்கின்றன.

அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கு ஏற்கனவே வடகொரியா தமது கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே குறித்த ஏவுகணை பரிசோதனை இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் குறித்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் எல்லையை அண்மிக்கவில்லை என ஜப்பான் உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts: