மிகப்பெரிய சரக்கு விமானம் பயணத்தை ஆரம்பித்தது!

Thursday, May 12th, 2016
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான Antonov An-225 Mriya, தனது முதல் பயணத்தை மத்திய ஐரோப்பாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கித் ஆரம்பித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பயணத்தை ஆரம்பித்த விமானம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சரக்கு விமானம் 10 பிரித்தானிய போர் தாங்கிகளை சுமக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த சரக்கு விமானம் 600 தொன் எடையிலானது.

இந்த சரக்கு விமானம் தனது அவுஸ்திரேலியா நோக்கிய பயணத்தை இந்தியா, மலேசியா வழியாக முன்னெடுக்கிறது.

இந்த ராட்சத விமானம் தரையிறங்குவதைக் காண  ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக உலகின் பெரிய சரக்கு விமானம் சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்டது. சோவியத் யூனியன் உடைந்ததை அடுத்து இந்த விமானம் உக்ரைன் கைவசம் வந்தது.

அந்த விமானத்தையே தற்போது உக்ரைன் நாட்டினர் மாற்றி அமைத்து உயிர் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3402526700000578-0-image-a-10_1462890651545

3401201900000578-0-image-a-12_1462890666135

Related posts: