லெபனானில் புதிய அரசாங்கத்தை அமைக்க அதிபர் அழைப்பு!

Thursday, November 3rd, 2016

லெபனானின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள மிஷெல் ஆன், சாத் ஹரிரியிடம் புதிய பிரதமராக பொறுப்பேற்று புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு முன்னணி சுன்னி அரசியல் பிரபலமான ஹரிரி இதற்கு முன் 2009 முதல் 2011 வரை பிரதமராக பதவி வகித்தார்.இந்த வார தொடக்கத்தில், லெபனானின் புதிய அதிபராக ஆன் பொறுப்பேற்று கொண்டார். அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹரிரியின் நியமனமும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அதிபரின் பொறுப்பேற்பு, லெபனானில் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த கால கட்டத்தில், 45 சந்தர்ப்பங்களில் புதிய அதிபரை நியமிக்க நாடாளுமன்றம் தவறியது குறிப்பிடத்தக்கது.

2005 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்படுவதற்குமுன், லெபனானில் மிகவும் சக்தி வாய்ந்த நபராக இருந்த ரஃபிக் ஹரிரியின் மகன் தான் ஹரிரி.

_92240563_gettyimages-90787232

Related posts: