லிபியா புகைப்படக்கலைஞர் சுட்டுக்கொலை!

Tuesday, October 4th, 2016

லிபியாவை சேர்ந்த புகைப்படக்கலைஞரை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

Jeroen Oerlemans என்ற புகைப்படக்கலைஞர் சிரியாவில் நடக்கும் அரசியல் பிரச்சனைகள், தீவிரவாத தாக்குதல்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டு வந்தார். இவரின் புகைப்படங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இவரை கொலை செய்ய வேண்டும் என பல நாட்கள் திட்டம் தீட்டி வந்த தீவிரவாதிகள், தக்க சமயம் பார்த்து இவரை சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றுள்ளனர்.

இவர் உயிரிழந்ததை, சிரியா இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை ஐஸ் தீவிரவாதிகள் 10 பத்திரிகையாளர்களை கொலை செய்துள்ளனர் செய்திகள் தெரிவிக்கின்றன..

மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலேயே பத்திரிகையாளர்கள் சிரியாவில் பணியாற்றுவதால், அங்கிருந்து திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என Jeroen Oerlemans பணியாற்றிய பத்திரிகையின் துணை நிர்வாக இயக்குநர் Robert Mahoney தெரிவித்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: