லடாக்கில் மீண்டும் போர்ப்பதற்றம் – இராணுவ அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடல்!

Wednesday, September 2nd, 2020

இந்திய – சீன எல்லைப்பகுதியான லடாக்கில் மீளவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளுடன் அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்திய-சீன லடாக் எல்லையில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் மோதல் போக்கு உருவாகியிருக்கிறது. சீன ராணுவம் அத்துமீறியதாகவும், அதை இந்திய இராணுவம் முறியடித்ததாகவும் பாதுகாப்புத்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியது. ஆனால் இந்தியஈராணுவம் அத்துமீறியதாக சீனா மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று லடாக் எல்லைப்பகுதியில் உள்ள ஏரியின் அருகே சீன இராணுவம் ஊடுருவ முயன்றதகாவும், அதை இந்திய இராணுவத்தினர் முறியடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மீண்டும் சீன இராணுவம் அப்பகுதிக்கு வரலாம் என்பதால், இந்திய இராணுவம் அங்கு படையை குவித்து வருகிறது. இராணுவ வீரர்களின் வருகையை கண்காணிப்பதில் அந்த இடம் முக்கிய பங்கு வகிப்பதால் மீண்டும் சீன இராணுவம் கட்டாயம் அங்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லடாக் எல்லையில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related posts: