பிரித்தானியாவிலுள்ள ரஷ்ய மாணவர்கள் உடனடியாக நாடுக்கு திரும்ப வேண்டும் – ரஷ்ய அதிபர் !

Saturday, April 21st, 2018

பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ரஷ்ய மாணவர்கள் உடனடியாக சொந்த நாடுக்கு திரும்ப வேண்டும் என ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு பிறப்பித்துள்ளார்

பிரித்தானியாவில் தங்கியிருந்த ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியாவை கொல்ல அண்மையில் நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது

இதை சுட்டிக்காட்டிய அதிபர் புடின், பிரித்தானியாவில் ரஷ்ய மாணவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார்

ரஷ்யர்களை மேற்கத்தேய நாடுகள் எதிரிகளாகவே பாவிப்பதாகவும், சமீபகால அரசியல் சூழல்கள் ரஷ்யர்களுக்கு எதிராகவே கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் ரஷ்ய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

ஆகவே பிரித்தானியாவில் தங்கியிருந்து கல்வி பயின்று வரும் ரஷ்ய மாணவர்கள் நாடு திரும்பியவுடன், அவர்களுக்கு சைபீரியாவில் வேலை பார்க்க முடியும் எனவும் புடின் கூறியுள்ளார்

பிரித்தானியாவை விடவும் பாரிய வேலை வாய்ப்புகள் சைபீரியாவில் குவிந்து கிடப்பதாகவும், அந்த நாடுகளில் வழங்கப்படும் அதே அளவு சம்பளத்தை வழங்கவும் சைபீரியா தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: