இந்தோனேசிய ஜனாதிபதியின் உத்தரவு!

Tuesday, July 25th, 2017

போதைப் பொருள் கடத்தல்காரர்களை சுட்டுக்கொல்லுமாறு இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ உத்தரவிட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதற்கு அந்த நாட்டு ஜனாதிபதி கடும் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார். இந்த நிலையில், அங்கு இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் வைத்து கருத்துதெரிவித்த அவர், கைது செய்யும்போது எதிர்ப்பு தெரிவித்தால் போதைப் பொருள் கடத்தல்காரர்களை சுட்டுக்கொல்லுமாறு அந்த நாட்டு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். எவ்வாறாயினும், ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் இந்த உத்தரவுக்கு வலதுசாரி மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் காவல்துறையினர் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில், 5 கிராம் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டாலே, அந்த நாட்டுச் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் இலங்கைத்தமிழர் மயூரன் சுகுமாரன் உள்ளிட்ட 18 பேர் போதைப் பொருள் கடத்தலில் சிக்கி, மரண தண்டனை விதித்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: