காஷ்மிர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து – இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருதலைபட்சமானது என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு!

Tuesday, December 12th, 2023

ஜம்மு – காஷ்மிர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் இந்திய அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்டதை உறுதி செய்யும் இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருதலைபட்சமானது என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின்படி எவரும் பறிக்க முடியாத சுய நிர்ணய உரிமையை காஷ்மீர் மக்கள் பெற்றிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதன் மூலம் சர்வதேச சட்டங்களை இந்திய உயர் நீதிமன்றம் மீறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உயர் நீதிமன்றம் மில்லியன் கணக்கான காஷ்மீர் மக்கள் தியாகத்துக்கு துரோகம் இழைத்துள்ளதெனவும் இந்திய உயர் நீதிமன்றத்தின் இந்த பாரபட்சமான தீர்ப்பினால், காஷ்மீர் போராட்டம் வலுவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் காஷ்மீர் மக்களின் உரிமைக்காக குரல் எழுப்பவுள்ளதாகவும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி அரசால் இரத்து செய்யப்பட்டதையடுத்து அந்த மாநிலம் இரண்டு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டது.

இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்டமை செல்லுபடியாகும் என இந்திய உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: