20,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட கப்பல் இன்று இலங்கை வருகின்றது – எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!
Monday, March 14th, 2022
எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் என எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதகடிப்படையில் 20,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று திங்கட்கிழமை இலங்கையை வந்தடையும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்தடைந்த கப்பலில் இருந்த டீசல் தற்போது நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த கப்பல் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வரும் என எதிர்பார்த்திருந்தபோதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தாமதமானது. கப்பலில் 38 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் டீசல் இருந்ததாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கை வரவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உயர் மட்ட பிரதிநிதிகள் குழு!
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு தொடர்ச்சியாக ஆதரவு - உலக வங்கியின் பிரதிநிதி...
எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்தான மண்டலங்களாக அடையாளம் காணப்பட்ட 17 நிர்வாக மாவட்டங்களிலுள்ள முக்கிய இட...
|
|
|
தற்போதைய நிலைமைளின் அடிப்படையில் நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது - இராணுவ தளபதி தெரிவிப்ப...
பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் - ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து விசேட கட...
உர மானியத் தொகையாக 15,000 ரூபா விவசாயிகளின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது - அமைச்சர் மஹிந்த அமரவீர ...


