உர மானியத் தொகையாக 15,000 ரூபா விவசாயிகளின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, May 9th, 2024

விவசாயத் திணைக்களத்தின் மூலம் Muriate of Potassium உரத்தை (MOP) இலக்காகக்கொண்டு முதல் உர மானியத் தொகையாக 15,000 ரூபா விவசாயிகளின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

அத்துடன் குறித்த இத்தொகைகள், கடந்த 07 ஆம் திகதிமுதல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டதாகவும் நெற்செய்கையை நிறைவு செய்துள்ள விவசாயிகளுக்கு  இந்நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுமென்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயத் திணைக்களத்தின் கூற்றுப்படி, கடந்த சில பருவங்களில் நெற்பயிர்ச் செய்கைக்கு Muriate of Potassium உரத்தின் பயன்பாடு அளவு குறைந்துள்ளது. நெற்பயிர்களை வலுப்படுத்தவும், நெல் விதைகளை முழுமையாக்கவும் Muriate of Potassium உரமிடுவது கட்டாயம் என வேளாண்மைத்துறை வலியுறுத்துகிறது. இருந்தாலும், கடந்த பருவத்தில் Muriate of Potassium உரத்தின் பயன்பாடு குறைந்துள்ளது.

கடந்த பருவத்தில் 08 இலட்சம் ஹெக்டேயர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும்  11,000 மெற்றிக் தொன் உரங்களே விற்பனை செய்யப்பட்டதாக திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.    Muriate of Potassium உரத்தை ஊக்குவிக்கும் நோக்கில்,உர மானியத் தொகையை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: