தற்போதைய நிலைமைளின் அடிப்படையில் நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Tuesday, June 29th, 2021

நாட்டில் தற்போதுள்ள நிலைமைக்களை ஆராய்ந்துபார்க்கும்போது தொடர்ந்து நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நாட்டை முடக்கவதற்கு பதிலாக பல்வேறு பயணத்தடை விதித்து நாட்டை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கொவிட் தடுப்பு செயலணி மற்றும் சுகாதார பிரிவு இணைந்து, நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் நிலைமை தொடர்பில் ஆய்வு செய்து வருகிறது.

அதில் கிடைக்கும் தரவுகளுக்கமைய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி அதற்கமைய அவசியம் ஏற்பாட்டால் நாடு முழுவதும் மீண்டும் பயணத்தடை விதிக்கப்படலாம் எனவும் சுட்டிக்காட்டியு்ளளார்.

மேலும் நாட்டின் தற்போதைய நிலைமையில் அதற்கு அவசியம் இல்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் எதிர்வரும் நாட்களில் கொவிட் நிலைமையில் மாற்றமடைய வாய்ப்புகள் உள்ளதாகவும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: