வங்களாதேஷில் பிரம்மாண்ட பாலத்தில் 215 கி.மீ நீள புகையிரத பாதை அமைக்கிறது சீனா!

Thursday, August 11th, 2016

பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்து வரும் சீனா தற்போது வங்காளதேசத்துடனும் அதிக நெருக்கத்தை காட்டி வருகிறது. வங்காளதேசத்தின் மிகப்பெரிய பாலமாக உருவாகவுள்ள ‘பத்மா பிரிட்ஜ்’ பன்முக போக்குவரத்து பாலத்தில் தலைநகர் தாக்காவில் இருந்து ஜெசோர் மாவட்டத்திற்கு 215 கி.மீ தூரத்திற்கு ரெயில் பாதையை உருவாக்க சீனாவின் அரசு நிறுவனமான சி.ஆர்.சி.சி.-க்கு ரூ.29,680 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் 66 பெரிய ரெயில் பாலங்கள், 244 சிறிய பாலங்கள், 14 புதிய ரெயில் நிலையங்கள் மற்றும் 100 ரெயில் பெட்டிகளை உருவாக்கி சீனா அதை வங்காளதேசத்திடம் வழங்குகிறது. சீனா உருவாக்கும் இந்த பாலத்தில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் ரெயில்கள் செல்ல இயலும்.

வரும் 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ’பத்மா பாலம்’ மேற்பகுதியில் 4 வழிச்சாலைகளையும், கீழ் பகுதியில்  அகலப்பாதையை கொண்ட ஒற்றை தண்டவாள ரெயில் பாதையையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: