ராம்குமாரை கொலை செய்தது பொலிஸாரே – தமிழச்சி!

சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரை பொலிஸாரே திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக பிரான்ஸ் தமிழச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கு தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரடி கருத்துக்களை வெளியிட்டு வரும் தமிழச்சி, ராம் குமார் மரணம் குறித்தும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
ராம்குமார் இன்று தற்கொலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, தமிழச்ச்சி தனது பேஸ்புக் பக்கத்தில், ‘சிறையில் ராம்குமாரை காவல்துறை கொலை செய்துள்ளது’ என்ற தலைப்பில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுவாதி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் இன்று 1 மணி நேரத்திற்கு முன்பு சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது காவல்துறை நடத்திய திட்டமிட்ட படுகொலை. இன்று ஜாமீன் மனு விசாரணையில் நிச்சயம் விடுதலை செய்யப்படுவான் என்ற தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததும் இல்லாமல் பெரியார் இயக்க தொண்டர் படையினர் 150 பேர்களுக்கு மேல் தயாராக ராம்குமாரை பாதுகாக்க போகிறார்கள் என்ற தகவல்களை முன்கூட்டியே கிடைத்ததால் அதன் ஆபத்தை உணர்ந்து கொண்டு காவல்துறை ராம்குமாரை கொன்றுவிட்டது.
ராம்குமார் வெளியே வந்தால் காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்தது என்கிற உண்மையை அறிவித்து விடுவான் என்ற பதற்றமே காவல்துறை சாகடிக்க காரணமாகவும் இருக்கிறது’ என அவர் தனது பேஸ்புக் பதில் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|