அமைதிப் பேச்சுக்களின்போது தேர்தல் பேச்சுக்கள் வேண்டாம் – வாலித் அல்-மலுவ்

Sunday, March 13th, 2016
சிரியாவில் அரசுத் தரப்பு படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரில்சுமார் இரண்டரை லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் அமைதி நிலவும் பொருட்டு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஐ.நா.,வின் மூலம் முயற்சி செய்து வருகின்றது. இருப்பினும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தை இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.   இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.   இந்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையில் சிரிய அதிபர் தேர்தல் குறித்து பேசக் கூடாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிரியாவின் வெளியுறவுத் துறை மந்திரி வாலித் அல்-மலுவ், அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கிறது என்பதை உறுதி செய்தார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் அதிபர் தேர்தல் குறித்து பேச வேண்டாம் என்றுக் கேட்டு கொண்டார். இது தொடர்பான எந்த கோரிக்கையையும் அரசு நிராகரிக்கும் என்றார்.

Related posts: