சமூக ஊடகங்களில் உண்மையை விட பொய்யான செய்திகள் வேகமாக பரவுகின்றன –  ஆராய்ச்சியாளர்கள்!

Sunday, March 11th, 2018

உண்மையைவிட பொய்யான செய்திகள் மிக விரைவாக சமூக ஊடகங்களில் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள “மாசாசூசெட்ஸ்” தொழில்நுட்ப நிறுவனம் ஆராய்ச்சி செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்காக 2016 ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு  வரை 1,26,000 பேரின் டுவிட்கள் கண்காணிக்கப்பட்டன.

அந்த அறிக்கையில்,

“மக்கள் உண்மையான செய்தியை விட பொய்யான செய்தியை அதிகமாக நம்புகின்றனர். இதனால் அவர்கள் பொய்யான செய்தியை சமூக ஊடகங்களில் மிக விரைவாக பகிர்கின்றனர். ஒரு உண்மையான செய்தி பகிரப்படும் நேரத்தில் 6 பொய்யான செய்திகள் பரவிவிடுகின்றன. உண்மையை விட பொய் செய்திகள் 70 சதவீதம் அதிகமாக பகிரப்படுகின்றன.

இதற்கு முக்கிய காரணம் மக்கள் புதிய மற்றும் வித்தியாசமாக செய்திகளை விரும்புகின்றனர். பொய்யான செய்திகள் அவர்களின் ஆவலை தூண்டுகின்றன. அதனால் வருகின்ற செய்தி உண்மையா? பொய்யா? என்பதை ஆராயாமல் அதனை பகிர்ந்து விடுகின்றனர்”என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற பொய்யான செய்திகள் பரவுவதை தடுக்க டுவிட்டர் நிறுவனம் புதிய விதிமுறைகளை கொண்டுவரவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts:

கடுமையான போக்குவரத்து சிரமங்கள்: வாரத்தில் 4 நாட்கள் தபால் சேவை மேற்கொள்ள தீர்மானம் - தபால்மா அதிபர்...
ஐ. நா சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரே பிரான்சே - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு!
ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 280 ஆக குறையும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!