ரஷ்ய தூதரக அதிகாரிகளை 72 மணித்தியாலத்தினுள் நாட்டை விட்டு வெளியேறுமாறு ஒபாமா உத்தரவு!

Saturday, December 31st, 2016

ரஷ்யாவைச்  சேர்ந்த 35 தூதரக அதிகாரிகளை  பேரை பதவிநீக்கம் செய்த  ஜனாதிபதி ஒபாமா அவர்களை  72 மணி நேரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதத் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஸ்யா  ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக   மோசடி செய்து  கண்ணிகளுக்குள்  நுழைந்து மோசடி  செய்து  விட்டதாக  குற்றம்  சுமத்தப்பட்டிருந்தது.

அமெரிக்காவின்  உளவு  ரகசியங்களை  வெளியிட்ட  எட்வேட்  ஸ்னோடன்  இந்த  குற்றச்சாட்டை  தெரிவித்ததுடன்  டொனால்டு  டிரம்ப்  வெற்றி பெறும் வகையில் மின்னணு  வாக்கு  இயந்திரத்தில் மாற்றம்   செய்யப்பட்டதற்கான  ஆதாரம்  தன்னிடம்   உள்ளதாகவும்  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதித்  தேர்தலில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்  வோஷிங்டனிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து  35 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் குடும்பங்களுடன் 72 மணித்தியாலத்துக்குள்  அமெரிக்காவை விட்டு  வெளியேறவேண்டும்  எனவும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

_93177277_b2b18d9b-24e7-417b-a667-a3d10e143753

Related posts: