ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தமது உயரிய இராணுவ அதிகாரிகளை சந்தித்து விஷேட கலந்துரையாடல்!
Saturday, November 11th, 2023
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் நிலவிவரும் போர் குறித்து தமது உயரிய இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார்.
ரொஸ்டோவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் முதன்மைச் செயலாக்க இயக்குநர் அலுவலகத்தின் தலைவர் ஜெனரல் சர்காய் ரூட்ஸ்கொய், இராணுவ அதிகாரி வெலரி கெராசிமோவ் ஆகியோருடன் புட்டினின் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இராணுவ அதிகாரிகளுக்கு புதிய வகை இராணுவக் கருவிகள் காண்பிக்கப்பட்டதாகவும், சிறப்பு இராணுவ நடவடிக்கை குறித்த மேம்பாடுகள் தொடர்பில் புடினுக்கு விளக்கமளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரொஸ்டோவில் உள்ள இராணுவத் தலைமையகத்திற்கு கடந்த மாதமன்று புடின் விஜயம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜெயலலிதா நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவமனை தெரிவிப்பு!
விமான விபத்து : போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு கோரினார்!
ஒன்றிணைந்த வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக...
|
|
|


