ஒன்றிணைந்த வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது!

Tuesday, May 11th, 2021

இரண்டாவது ஒன்றிணைந்த வீதிப்புனரமைப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் குறித்த வங்கிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தள்ளது..

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 3,400 கிலோமீற்றர்கள் கிராமியப் பாதைகளை புனரமைத்து பராமரிப்பதற்கும், குறித்த மாகாணங்களிலுள்ள கிராமிய சமூகம் மற்றும் சமூகப் பொருளாதார மத்திய நிலையத்திற்கும் இடையே காணப்படும் 340 கிலோமீற்றர் தேசியமட்ட வீதிகளைப் புனரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டம் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாகப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, இரண்டாம் வீதிப்புனரமைப்பு முதலீட்டு வேலைத்திட்டத்திற்கு நிதியிடலுக்காக உடன்பட்டுள்ள குறித்த நிதியின் மூன்றாம் தவணை நிதியாக ஆசிய அபிவிருத்தியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும், அதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு நிதி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: