ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீனா விஜயம் – சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சர்வதேச அவதானிகள் கருத்து!

Tuesday, October 17th, 2023

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று சீனா சென்றடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனா தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு 130 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்று அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதன் ஒருபகுதியாக புடின் இன்று சீனா சென்றடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, சீனா இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக, அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புடின் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பின் ரஷ்யாவை பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கும் நிலையில், புடின் மற்றும சீனா அதிபர் ஜின்பிங் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போர் இடம் பெற்றுவரும் வேளையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆன்டனி பிளிங்கன் கடந்த வாரம் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இஸ்ரேல்-பலஸ்தீனத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: