மீட்பு நடவடிக்கைக்காக முப்படை!

Friday, May 26th, 2017

நாட்டில் நிலவும் குழப்பமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீட்பு நடவடிக்கைக்காக முப்படையினரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளுக்காக நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை இராணும் தெரிவித்துள்ளது.இது தவிர காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் நிவாரண பணிகளுக்காக கடற்படையினரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நெலுவ, மொரவக்க, கம்புறுபிட்டிய போன்ற பிரதேசங்களில் 04 படகுகள் அனுப்பப்பட்டுள்ளதுடன், மாத்தறை மாவட்டத்திற்கு 01 படகும், களுத்துறை, கலவானை பிரதேசங்களுக்கு 02 படகுகளும் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் விமானப் படையினரின் இரண்டு ஹெலிகப்டர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.பெல் 212 மற்றும் எம்.ஐ. 17 வகை ஹெலிகப்டர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விமானப்படை மேலும் அறிவித்துள்ளது.

Related posts:

யாழ்.மாநகரில் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை - மாநகரம் தொடர்ந்து முடக்கப்படுமா என்பது தொடர்பில் இன்றைய...
சீனா – இலங்கை இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம் - இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார நடவட...
ஏப்ரல் 19 ஆம் திகதி தேர்தல் - பிரசாரங்கள் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என அறிவுறுத்து!

கிளினிக் சேவையூடாக மருந்துகளை பெறும் நோயாளர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர அறிவித்த...
பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க அனுமதி - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!
திடீர் தேர்தல் அடுத்த போகத்தில் நெல் கொள்முதல் செய்வதை பாதிக்கும் - நிதி அமைச்சின் அதிகாரி சுட்டிக்க...