திடீர் தேர்தல் அடுத்த போகத்தில் நெல் கொள்முதல் செய்வதை பாதிக்கும் – நிதி அமைச்சின் அதிகாரி சுட்டிக்காட்டு!

Wednesday, January 4th, 2023

இந்தாண்டு அவசரத் தேர்தல் நடத்தப்பட்டால், அடுத்த போகத்தில் நெல் கொள்முதல் செய்யக்கூட அரசாங்கம் பணத்தை இழக்கும் என நிதியமைச்சகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நெல் கொள்முதல் செய்ய முடியாமல் போனால் மீண்டும் நெல் சந்தை சரியும் அபாயம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையால் தனியாரால் மாத்திரமே நெல்லை கொள்வனவு செய்யப்படுவதாகவும், இதனால் விவசாயிகளுக்கு ஆதரவற்ற நிலை ஏற்படுவதுடன் விலையும் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முதற்கட்டமாக நெல் அறுவடையில் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்றும், பிரதான நெல் விளைச்சல் அதிகரிக்கலாம் என்றும் விவசாய துறையினர் கணித்துள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில், அரசிங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்ய முடியாவிட்டால், நெல் சந்தையே வீழ்ச்சியடையும். அரிசி ஏகபோகத்தை உருவாக்குவதால், அரிசி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெரும் போகத்தில் 800,000 ஹெக்டேர் நெல் அறுவடையை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதனால் கிடைக்கும் அறுவடையில் இருந்து மூன்று மில்லியன் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்காக 2000 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டும் எனவும் அவசர தேர்தல் நடத்தப்பட்டால் மேற்படி தொகையை அரிசி கொள்வனவு செய்ய பயன்படுத்த முடியாது எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு 12 பில்லியன் ரூபாவை கோரியுள்ளதுடன், அந்த தொகை அதிகரிக்கலாம் என நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: