இந்தியாவின் 74 ஆவது குடியரசுதினம் இன்று – யாழ்ப்பாணத்திலும் இந்திய துணைத்தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுப்பு!

Thursday, January 26th, 2023

இந்தியாவின் 74வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அந்நிலையில் இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் யாழ்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில்  இன்று காலை இடம்பெற்றது.

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  இந்திய குடியரசு தலைவருடைய சிறப்புரையை இந்தியத் துணைத்தூவர் வாசித்தார்.

அதைத் தொடர்ந்து குடியரசு தின சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதனிடையே

1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான ஜனவரி 26ஆம் திகதி இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று அங்கு விசேட நிகழ்வுகள் ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன.

குடியரசு தினத்தை முன்னிட்டு தமது ட்விட்டர் கணக்கில் வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் தருணம் சிறப்பானது எனவும் நாடு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் அனைவரும் இந்த குடியரசு தின விழாவைக் கொண்டாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய குடியரவு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் அனைவரின் நிலையையும் உயர்த்துதல் என்பது இன்னும் எஞ்சி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கையிலும் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்படி, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தனிகரகத்தால் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இதேவேளை, இந்தியாவின் 74ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து இந்திய குடியரசு தலைவருடைய சிறப்புரையை வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: