ரஷ்யா மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடி குண்டு தாக்குதல் – 10 பேர் பலி
Monday, April 3rd, 2017
ரஷ்யா St Petersburg மெட்ரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற வெடி குண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 20 பேர் வரையில் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
St Petersburg, Sennaya Ploshchad மற்றும் அதன் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், குறித்த சம்பவம் தீவிரவாத தாக்குதல் சம்பவமா..? என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
மாயமான மலேசிய விமானம் கண்டுபிடிப்பு? புகைப்பட ஆதாரங்களால் பரபரப்பு
கேபிள் கார் அறுந்து விழுந்து 7 பேர் பலி!
அமெரிக்கா மீது பிரான்ஸ் அதிருப்தி!
|
|
|


