ஜெர்மனி ஜனாதிபதி ஆதரவாளர்கள் நடத்தும் பேரணியில் எர்துவானின் உரைக்கு தடை!

Tuesday, August 2nd, 2016

ஜெர்மனியின் கலோனில் துருக்கிய அதிபரின் ஆதரவாளர்களால் நடத்தப்படும் பேரணியில், காணொளி இணைப்பு மூலம் அதிபர் ரிசீப் தயிப் எர்துவான் உரையாற்றுவதை ஜெர்மனி தடைசெய்திருப்பது, ஜனநாயகத்திற்கு புறம்பானது என்று துருக்கி அரசு தெரிவித்திருக்கிறது.

எர்துவானின் செய்தியை தடை செய்ததற்கான உண்மையான காரணத்தை அறிய துருக்கி ஆவலாக இருக்கிறது என்று அதிபரின் பேச்சாளர் இப்ராஹிம் காலின் கூறியுள்ளார்.ஜெர்மனியில் வாழும் துருக்கிய அதிபரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்கும் இந்த பேரணியில், துருக்கியின் விளையாட்டுத் துறை அமைச்சர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதத்தில் முன்னதாக, துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து, இது அரசியல் முறுகல் நிலையை தூண்டும் என்று கூறி வெளிநாட்டு பேச்சாளர்களின் காணொளி செய்திகளை ஜெர்மனி ஆட்சியாளர்கள் தடை செய்திருக்கின்றனர்.

Related posts: