ஆளும் பழமைவாத கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்!

Saturday, December 14th, 2019


பிரித்தானியாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலின் முற்கூட்டிய கணிப்பீட்டு பெறுபேறுகளின் படி, ஆளும் பழமைவாத கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் ஊடகங்கள் இந்த முற்கூட்டிய கணிப்பீட்டு பெறுபேற்றை வெளியிட்டுள்ளன. கன்சர்வேட்டிவ் கட்சி 86 பெரும்பான்மை ஆசனங்களால் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி ஆளும் கட்சி மொத்தமாக 368 உறுப்பினர்களை பெறும் என்றும், இது கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த கட்சி பெற்ற ஆசனங்களைக்காட்டிலும் 50 ஆசனங்கள் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்கட்சி 191 உறுப்பினர்களை வெற்றிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் உத்தியோகபூர்வு பெறுபேறுகள் வெளியாகவில்லை

Related posts: