இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் , பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் புதிய அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

Friday, April 22nd, 2022

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி ஜே. சுங் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை (பாதுகாப்பு தலைமையக வளாகத்தில்  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் பாதுகாப்புச் செயலாளரும் அமெரிக்க தூதுவருக்கு சிறப்பு வரவேற்பளித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது. நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்தும் அமெரிக்க தூதுவரிடம் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் ஜெனரல் குணரத்ன மற்றும் அமெரிக்க தூதுவரும் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக இவ்வருடம் பெப்ரவரி மாதம் கொழும்பு வந்த சுங் அவர்கள் தனது நச்சாண்று பத்திரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷடம் பெப்ரவரி 25 ஆம் திகதி கையளித்தார்.

புதிய அமெரிக்க தூதுவர் அமெரிக்க வெளியுறவு சேவையின் மூத்த அமைச்சர் ஆலோசகர் பதவி நிலையில் ஒரு மூத்த அதிகாரியாவார். மேலும் இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளில் மூத்த பதவிகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: