மாயமான மலேசிய விமானம் கண்டுபிடிப்பு? புகைப்பட ஆதாரங்களால் பரபரப்பு

Saturday, March 5th, 2016

மாயமான மலேசிய விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பறக்கும் தட்டுகளை ஆய்வு செய்யும் குழு ஒன்று வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பறக்கும் தட்டுகளை ஆய்வு செய்துவரும் குழு ஒன்று நன்னம்பிக்கை முனை அருகே ஆய்வினை மேற்கொண்டு வந்துள்ளது.

அப்போது அந்த பகுதியில் விமானத்தின் பாகங்கள் போன்ற காட்சியை காணக்கிடைத்ததாக அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நீருக்கடியில் புதையுண்ட நிலையில் காணப்படும் இந்த நிழல் மாயமான மலேசிய விமானமாக இருக்கலாம் எனவும் அந்த குழுவினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் நன்னம்பிக்கை முனை பகுதியில் கடலின் சீற்றம் வழக்கத்தைவிட அதிகமாகவே காணப்படுவதால், அப்பகுதியில் இருந்து 30-60 கிலோ மீற்றர் தொலைவுக்கு சென்றிருக்க வாய்ப்பு உண்டு எனவும் கூறுகின்றனர்.

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகளின் தேடுதல் குழுக்கள் இணைந்து செயல்பட்டு வந்தது.

தேடுதலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் கடந்த யூன் மாதம் தேடுதல் திட்டத்தை ஒத்திவைப்பதாகவும் அந்த சிறப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்

Related posts: