அமெரிக்கா மீது பிரான்ஸ் அதிருப்தி!

Saturday, May 12th, 2018

ஈரானுடன் வர்த்தக தொடர்பினை மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதார தடையினை கொண்டு வரும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை பிரான்ஸ் வன்மையாக கண்டித்துள்ளது.

ஈரானின் அணு திட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார தடையினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்  அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படும்பொருளாதார தடை காரணமாக ஐரோப்பிய நிறுவனங்கள் அதிகளவில் பாதிப்படைவதற்கான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரான்சின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீன் வைவ்ஸ் லீ டிரெய்ன் (Jean-Yves Le Drian)  தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டிற்கு பின்னர், பல பிரெஞ்ச் நிறுவனங்கள் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்களை பிரான்சுடன் மேற்கொண்டுள்ளன.

இதேவேளை, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரானின் அணு திட்டத்தை மாற்றுவதில் கவனம் செலுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: