தீவிரவாதிகளுக்கு தடை விதிப்பதில் “மறுப்புரிமை வீட்டோ அதிகாரம்’ பயன்படுத்தலுக்கு இந்தியா கண்டனம்

Saturday, April 16th, 2016

ஐ.நா.வில் தீவிரவாதிகளுக்கு தடை விதிக்கப்படுவதில் “மறுப்புரிமை வீட்டோ அதிகாரம்’ பயன்படுத்தப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிற ஐ.நா. சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. 2 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. இதில் பாதுகாப்பு கவுன்சில் என்பது 15 நாடுகளைக் கொண்ட அதிகாரமிக்க அமைப்பு ஆகும். இதில், இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷியா, அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. மீதி 10 இடங்கள், நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள 5 நாடுகளுக்கு மட்டும் இந்த மறுப்புரிமை அதிகாரம் (வீட்டோ) உள்ளது.

பதன்கோட் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட மசூத் அசார் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் இந்தியா, கடந்த பிப்ரவரி மாதம் முறையிட்டது. இந்தியாவின் முறையீடு தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ‘1267 குழு’ கடந்த 30–ந் தேதி கூடியது. இந்த கூட்டத்தில் மசூத் அசாரை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதிப்பதற்கு பாதுகாப்பு கவுன்சிலின் 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் சீனா இதை ஏற்கவில்லை.

மசூத் அசார் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நினைத்ததை சாதித்து விட்டது. வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சீனா, மசூத் அசார் மீதான நடவடிக்கையை தடுத்து நிறுத்தி விட்டது. பதன்கோட் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட மசூத் அசாருக்கு தீவிரவாதிக்கு உரிய தகுதி இல்லை என்று சீனா கூறியது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு தடை விதிக்கப்படுவதில் “மறுப்புரிமை வீட்டோ அதிகாரம்’ பயன்படுத்தப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

”தீவிரவாத நடவடிக்கையால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எச்சரிக்கை” என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் பேசிய ஐ.நா.விற்கான இந்திய தூதர் சையத் அக்பரூதீன் பேசுகையில் “அல்-கொய்தா, தலிபான் மற்றும் ஐ.எஸ். தீவிரவாத தடை கமிட்டிகளின் ஒருமைப்பாடு தொடர்பான நடமுறைகளை பரீசிலிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஒருமித்த மற்றும் தெளிவற்ற நடைமுறையின் விளைவு பொறுப்பின்மையாகிறது,” என்று கூறினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்று உள்ள 15 நாடுகளுக்குமே வீட்டோ அதிகாரம் உள்ளது என்பதையும் அக்பரூதின் வலியுறுத்தினார்.

“ஐ.நா.வில் தீவிரவாத இயக்கங்களுக்கு தடைவிதிக்கும் விவகாரத்தில், கோரிக்கையானது எப்படி? ஏன்? ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது முறையாக தெரிவிக்கப்படவில்லை…  தீவிரவாதத்தை அளிப்பதில் பொருளாதார தடை கமிட்டியானது சர்வதேச சமூதாயம் தரப்பில் செயல்பட்டு நம்பிக்கையை உருவாக்கவேண்டும், மறுப்புரிமை வீட்டோ அதிகாரம் மூலம் தண்டனையில் இருந்து தப்புவதற்கு காரணமாக இருக்க கூடாது,” என்று அக்பரூதின் பேசிஉள்ளார். ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம் பெற்று உள்ள சீனா தீவிரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை தொடர்ந்து தடுத்து வருகிறது.

 

Related posts: