ரஷ்யா கிரைமியாவிற்கு ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை அனுப்புகின்றது!

Saturday, August 13th, 2016

சிரியாவின் வடபிரதேசத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த மென்பிஜ் நகரை விடுவித்துள்ளதாக குர்திஷ் மற்றும் அரபு ஆயுத படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் ஊடாக ஐரோப்பாவிற்குள் பிரவேசிக்கும் பாதையை தாம் துண்டித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். மென்பிஜ் நகரில் இருந்து ஐ.எஸ் ஆயுததாரிகளை வெளியேற்றுவதற்கு 73 நாட்கள் வரை போரிட்டதாகவும் இறுதிநாட்களில் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட 2 ஆயிரம் மக்களை விடுவித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

துருக்கியுடனான எல்லைக்கு அருகிலுள்ள மென்பிஜ் நகரை இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஐ.எஸ் ஆயுததாரிகள் கைப்பற்றிருந்தனர். சிரிய அரச படையினரின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள அலேப்போ நகரம் மற்றும் ஐ.எஸ் ஆயுததாரிகளின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள ரக்கா ஆகியவற்றுக்கு மென்பிஜ் நகர் ஊடாகவே பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்பிஜ் நகரம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.எஸ் ஆயுததாரிகளால் ஐரோப்பாவிற்குள் எந்தவொரு வழியிலும் பிரவேசிக்க முடியாது என சிரியாவின் குர்திஷ் தலைவர் சாலீக் முஸ்லீம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: