ரஷ்யா –உக்ரைன் இடையே இணக்கம்!

Wednesday, December 11th, 2019

கிழக்கு உக்ரைன் பகுதிகளில் தொடரும் யுத்தத்தை இந்த வருட இறுதிக்குள் நிறைவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இணங்கியுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஐந்தரை ஆண்டு காலமாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் இடம் யுத்தம் காரணமாக இதுவரை 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த யுத்த நிறுத்த இணக்கப்பாடுகளுக்கு அமைவாக இரண்டு நாட்டு இராணுவத்தினரையும் திருப்பி அழைக்கும் நடவடிக்கைகள் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

இந்த யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையை ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்னின்று செயற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: