ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைக்கு ட்ரம்ப் எதிர்ப்பு!

Wednesday, July 26th, 2017

2016ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா மேற்கொண்டத் தலையீட்டுக்கு எதிராக புதிய தடைகளை விதிப்பதற்கான சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ரஷ்யாவுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துவதற்கு அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு சபையில் ஆதரவாக வாக்களித்துள்ளனர்

இந்த சட்டமூலம் செனட் சபையில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திடுவார்.ஆனால் ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்.இந்த நிலையில் குறித்த சட்டமூலத்தை தமது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்ய வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts: