ஒலிம்பிக் போட்டிகளில் ரஷிய வீரர்களுக்கான தடையில் தளர்வு!

Monday, July 25th, 2016

அரசின் ஆதரவுடன், ரஷிய தடகள வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதியான நிலையில், ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ஒட்டுமொத்த ரஷ்ய அணிக்கும் தடை விதிக்கப் போவதில்லை என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவெடுத்துள்ளது.

தனித்தனி விளையாட்டுக்களுக்கான சர்வதேச அமைப்புக்கள், வீர்ர், வீராங்கனைகளின் ஊக்கமருந்து பயன்பாடு தொடர்பான ஆய்வுகளை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படும் எந்த ஒரு ரஷ்ய வீர்ரும், கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்ட முடிவல்ல என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் ஊக்க மருந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான ரஷிய வீரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இந்த முடிவை ரஷிய விளையாட்டு அமைச்சர் விடலி முட்கோ வரவேற்றுள்ளார்

Related posts: