முதியோர் ஊக்கத்தொகை அதிகரிப்பு திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு!

Tuesday, September 27th, 2016

 

சுவிட்சர்லாந்தில் முதியோருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை மேலும் 10 சதவிகிதம் அதிகரிக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் தொழிற்சங்க கூட்டமைப்பானது இதுகுறித்து நடந்திய வாக்கெடுப்பில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளனர். தற்போதுள்ள முதியோர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையில் இருந்து மேலும் 10 சதவிகிதம் அதிகரிக்கலாமா என்று பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த திட்டத்தினால் ஆண்டொன்றிற்கு 4.1 பில்லியன் பிராங்க் அதிகமாக அரசுக்கு செலவாகும் என கருதப்படுகிறது. குறிப்பிட்ட திட்டமானது தோல்வி கண்டிருந்தாலும் பிரஞ்சு மற்றும் இத்தாலி மொழி பேசும் மக்களிடையே இத்திட்டத்திற்கு அதிக வரவேற்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

5 மாகாணத்தில் உள்ள பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதில் ஜூரா(59.5%), ஜெனீவா(53.6%) உள்ளிட்ட மாகாணங்களில் பெரும்பாலானோர் ஆதரித்திருந்தாலும், அதிக மக்கள் தொகை கொண்ட சூரிச்(38.3%) மற்றும் பேர்ன்(39.8%) மக்கள் எதிராகவே வாக்களித்துள்ளனர்.

தொழிற்சங்க கூட்டமைப்பானது கொண்டுவந்த இந்த திட்டத்திற்கு சுவிஸ் அரசும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் ஆண்களுக்கான ஓய்வு வயது 65. பெண்கள் ஓய்வு பெறும் வயது 64 என்பது குறிப்பிடத்தக்கது.

Swiss-Flag-720x480

Related posts: