தற்கால அடிமை முறையை அகற்ற பிரித்தானிய பிரதமர் தீவிரம்!

Monday, August 1st, 2016
பிரித்தானியாவில் தற்கால அடிமை முறை என்று சந்தேககிக்கப்படும் ஆயிரக்கணக்கான சம்பவங்களைக் கையாள புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பிரிவுக்கு பிரித்தானிய பிரதமர் தெரீசா மே தலைமை தாங்கவிருக்கிறார்.

வெளிநாடுகளிலிருந்து மனிதர்களை கடத்துவதோடு தொடர்புடைய அடிமைமுறை காட்டுமிராண்டித்தனமான தீமை என்று தெரீசா மே குறிப்பிட்டுள்ளார்.

அடிமை முறைமைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஓராண்டுக்கு முன்னர், பிரிட்டன் சட்டம் இயற்றியிருந்தாலும், காவல்துறையினருக்கும், குற்றவியல் நீதி அமைப்புகளுக்கும் இடையில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் இன்னும் முரண்பாடுகள் இருப்பது மீளாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

10 முதல் 13 ஆயிரம் பேர் வரை இன்னும் ஐக்கிய ராஜ்யத்தில் சாத்தியக்கூறான அடிமை முறைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் மதிப்பிட்டுள்ளனர். பாலியல் சுரண்டலுக்காக பலர் ஈடுபட்டிருக்கும் மனித கடத்தல் மூலம் செய்யப்படும் வர்த்தகம், ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது

Related posts: